×

இந்திய கிரிக்கெட் அணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: அற்புதமான டெஸ்ட் தொடர் வெற்றியை ஆஸ்திரேலியாவில் பெற்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள்.

அனைத்து வீரர்களும் பங்களித்ததன் மூலம், அணியாய் இணைந்து செயல்படுதலின் முக்கியத்துவத்தை இறுதிப் போட்டியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி எடுத்துரைத்திருக்கிறது. நமது இளம் வீரர்களின் சிறப்பான ஆட்டம் மகிழ்ச்சியளிக்கிறது.

Tags : MK Stalin ,cricket team ,Indian , Indian team, cricket, MK Stalin, congratulations
× RELATED மு.க.ஸ்டாலின் கண்டனம்