இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் உரையாடல்: பாரபட்சமற்ற விசாரணை தேவை: பாஜவுக்கு கே.எஸ்.அழகிரி கோரிக்கை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ம் தேதி ரிபப்ளிக் தொலைக்காட்சியில் பாகிஸ்தான் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தும் என்று முன்கூட்டியே கூறிய செய்தியின் பின்னணியானது தற்போது வாட்ஸ் அப்பில் வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தலைமை செய்தி ஆசிரியர் அர்னப் கோஸ்வாமி உள்ளிட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே, பாரபட்சமின்றி நேர்மையாக தேர்தல் நடத்தி, அதில் வெற்றி பெறுவதற்கு மாறாக மதவாத உணர்வுகளை தூண்டி, வாக்கு வங்கியை விரிவுபடுத்துகிற நோக்கில் பிரதமர் மோடி செய்த சூழ்ச்சிகள் பாலக்கோட் தாக்குதல் பின்னணி குறித்து வாட்ஸ்அப்பில் வெளிவந்த உரையாடல்கள் அம்பலப்படுத்தியுள்ளன. இதன்மூலம் வெளியாகியிருக்கிற இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்துகிற  உரையாடல் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை நடத்த மத்திய பாஜ அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். இல்லையெனில் இதனால் ஏற்படுகிற தேசவிரோத குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் ஆளாவதிலிருந்து தப்பிக்க முடியாது என்று எச்சரிக்கையோடு கூற விரும்புகிறேன்.

Related Stories: