ஜெயலலிதா பேசிய இடத்தில் எடப்பாடி நாளை பிரசாரம்

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்றும், நாளையும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். இன்று காலை 10 மணிக்கு திருப்போரூர் கந்தசுவாமி கோயில் அருகே ஓஎம்ஆர் சாலையில் முதல்வர் பேசுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1987ம் ஆண்டு எம்ஜிஆர் இறந்தவுடன் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாக உடைந்தது.

அப்போது ஜெயலலிதா தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். அந்த நேரத்தில், 1988ம் ஆண்டு மே 30ம் தேதி, திருப்போரூர் வந்த ஜெயலலிதா இதே இடத்தில் வேனில் இருந்தபடி பிரசாரம் செய்தார். தற்போது சென்டிமென்டாக அதே இடத்தை அதிமுகவினர் தேர்வு செய்துள்ளனர் என கூறப்படுகிறது.

Related Stories:

>