×

விமான நிலைய பராமரிப்பு: அதானி குழுமம் ஒப்பந்தம்

புதுடெல்லி: திருவனந்தபுரம், கவுகாத்தி, லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு ஆகிய 6 விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட உள்ளதாக மத்திய அரசு கடந்த 2019 பிப்ரவரியில் அறிவித்தது. இதையடுத்து, கடும் போட்டிகளுக்கு இடையே அதானி குழுமத்துக்கு இந்த விமான நிலையங்களை 50 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் உரிமம் கிடைத்தது. இதனால், லக்னோ, அகமதாபாத், மங்களூரு விமான நிலையங்கள் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய விமான ஆணையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், “இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம், திருவனந்தபுரம், கவுகாத்தி, ஜெய்ப்பூர் விமான நிலையங்களை 2021 ஜனவரி 19ம் தேதியில் இருந்து, 180 நாட்களுக்குள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிர்வகிக்க தொடங்கலாம்”என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Airport, Maintenance, Adani Group, Contract
× RELATED பிரதமர் மோடி வலியுறுத்தல்: உணவு பதப்படுத்துதலில் புரட்சி