போக்சோவில் டிரைவர் கைது

புழல்: பெரியார் நகர் ஜி.கே.எம் காலனியை சேர்ந்தவர் பிரபாகரன்(25). ஆட்டோ டிரைவர். இவரது உறவினரின் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி  பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சிறுமியின் தாயார் மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை நேற்று முன்தினம் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Related Stories:

>