×

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: தனியார் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்.!!!

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக, தமிழக உணவு துறை அமைச்சர் காமராஜ் கடந்த 5-ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், எந்தவித அறிகுறியும்  இல்லாமல் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் காமராஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில்,  சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.  வென்டிலேட்டர் உதவியுடன் அமைச்சர் காமராஜூக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து எம்ஜிஎம் தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர் காமராஜரை மாற்ற திட்டமிப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் கடந்த 14 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : Kamaraj ,Corona , Minister Kamaraj admitted to intensive care unit
× RELATED கொரோனாவில் இருந்து மீண்ட அமைச்சர்...