×

வாக்காளர் அடையாள அட்டை வெச்சிருக்கீங்களா?

தேர்தல் ஆணையம் (EC) புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை மின்னணு வடிவத்தில் மாற்றி  உள்ளது. அதாவது,  தேவையான இடங்களில் , காகித அட்டையை காட்ட தேவையில்லை   மின்னணு மூலம் காண்பிக்கும்  இ- போர்டிங் போன்ற ஒரு முறையை தேர்தல் ஆணையம் செயல்படுத்தியுள்ளது. தேர்தலின்போது வாக்குச்சாவடியில் வாக்காளர்களை அடையாளம் காணவேண்டியது கட்டாயமாகும்.ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் ஆணையம் வீடு வீடாகச்சென்று வாக்காளர் பட்டியலை மறு ஆய்வு செய்கிறது. அவ்வாறான நேரங்களில் வெளியூர் சென்றவர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7-ஐ பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும்

ஒவ்வொரு வருடமும் ஜனவரி 01, அன்று ஒருவருக்கு 18 வயது பூர்த்தியடைந்திருந்தால், தன்னுடைய பெயரை சேர்ப்பதற்கு ஒருவர் விண்ணப்பிக்க முடியும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு  படிவம் - 6 ஐ பயன்படுத்தவேண்டும். படிவம்- 6 உடன், 2 வண்ணப் புகைப்படம் இணைக்கவேண்டும்.பிறப்பு சான்றிதழின் நகல் கட்டாயம் இணைக்க வேண்டும் (அதாவது மாநகராட்சியால் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழ் பள்ளி / கல்லூரியால் வழங்கப்படும் பிறப்பு தேதி உள்ள சான்றிதழ்)விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது பெற்றோர் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் (அதாவது வங்கி / அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்கு புத்தகம் அல்லது குடும்ப அட்டை ,பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் / வருமான வரி மதிப்பீட்டின் ஆணை ,சமீபத்திய குடிநீர் / தொலைபேசி / மின்சாரம் / எரிவாயு இணைப்பிற்கான ரசீது ,என ஏதாவது ஒன்று கொடுக்கப்பட்ட முகவரியில் விண்ணப்பதாரரின் பெயரில் அஞ்சல் துறையால் பெற்ற / பட்டுவாடா செய்யப்பட்ட அஞ்சல் நகலை சான்றாக இணைக்க வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டைக்கு எங்கே /
எப்படி விண்ணப்பிப்பது?

மாநகராட்சிப் பகுதிக்குள் வசித்து வருபவராக இருந்தால், உங்களுடைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்,  ஆணையர் அலுவலகம், மண்டல அலுவலகம், வருவாய்  கோட்ட அலுவலகம் ஆகிய இடங்களில் விண்ணப்பத்தைப் பெற்று சமர்ப்பிக்கலாம்.

மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், வருவாய்  கோட்டாட்சியர்  அலுவலகம் (வாக்காளர் பதிவு அலுவலர்), வட்டாட்சியர் அலுவலகம் (துணை வாக்காளர் பதிவு  அலுவலர் ) ஆகிய இடங்களில் விண்ணப்பத்தைப் பெற்று சமர்ப்பிக்கலாம்.

உங்களுக்கு அருகிலுள்ள மையத்தை அல்லது தாலுகா அலுவலகத்தில் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற விவரத்தை http://elections.tn.gov.in/EPICCENTREADDRESS1.pdf இத்தளத்தில்  சென்று தெரிந்து கொள்ளலாம்.

பெயரை நீக்குவதற்கான
விண்ணப்பம்

வேறு வாக்காள பகுதிக்கு இடம் மாறினாலோ , மற்ற  மாவட்ட தொகுதிக்கு வாக்காளர் குடிபெயர்தல், மரணம், அல்லது தவறுதலான தகவல் பதிவு செய்யப்பட்டிருந்தால், ஒருவர் பெயர் நீக்கத்திற்கான விண்ணப்பத்தினை வட்டாட்சியாரிடம் படிவம்-7  ஐ பயன்படுத்தி சமர்ப்பிக்கவேண்டும்.

பெயர் திருத்தத்திற்கான விண்ணப்பம்

உங்களுடைய தேர்தல் அடையாள அட்டையில் (எபிக்) அல்லது வாக்காளர் பட்டியலில் ஏதாவது தவறு ஏற்படும்போது (எ.கா - பெயரில், வயதில் அல்லது தகப்பனார் பெயரில் தவறு ஏற்படுதல்) தேவையான திருத்தங்கள் வேண்டி நீங்கள் விண்ணப்பிக்க முடியும். தவறான பதிவின் திருத்தத்திற்கு படிவம்-8 ஐ பயன்படுத்துங்கள்.

நகராட்சி பகுதிக்குள் வசித்து வருபவராக இருந்தால், உங்களுடைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க :

§     துணை ஆணையர் அலுவலகம் (நகராட்சி அலுவலகம்)
§     அஞ்சல் அலுவலகங்கள்
§     வணிக வளாகங்களில் அமைந்திருக்கும் இடுபெட்டிகள்.
§    பெட்ரோல் விற்பனை நிலையங்கள்

நகராட்சி எல்லைக்குள் நீங்கள் வசிப்பவராக இருந்தால், உங்களுடைய மாவட்டங்களில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க :

§    துணை ஆட்சியரின் அலுவலகம்
§    வருவாய் வட்டாட்சி  அலுவலகத்தில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலரிடம் )
§    வட்டாட்சியர் அலுவலகம் ( துணை வாக்காளர் பதிவு அலுவலர் )

புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், ஆதார், டிரைவிங் லைசன்ஸ் போன்ற  மாற்று புகைப்பட அடையாள ஆவணத்தைக் காட்டலாம்.

டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை எப்படி பெறுவது?

இந்த வசதியைப் பெற, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவத்தில் வழங்கப்பட்ட செல்பேசி எண் (அ) மின்னஞ்சல் முகவரியை வாக்காளர் பதிவு அதிகாரியிடம் வழங்க  வேண்டும்.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவுடன்,  செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் தகவல் அனுப்பிவைக்கப்படும். பின்னர், புதிய வாக்காளர் அட்டையை OTP (ஒன் டைம் கடவுச்சொல்) அங்கீகாரம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவிக்கிறது.

தற்போது அடையாள அட்டை வைத்திருக்கும்  வாக்காளர்கள், வாக்காளர் பதிவு அதிகாரியிடம் தங்கள் விவரங்களை மீண்டும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்,டிஜிட்டல் வாக்காளர் அட்டை , பெரும்பாலும் பிடிஎஃப் (PDF)  கோப்பு வடிவமைப்பில் கிடைக்கும். மேலும், கணினி/மடிக்கணினி அல்லது செல்பேசி என எந்த சாதனங்களிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தற்போதுள்ள புகைப்பட அடையாள அட்டை காகிதங்களை அச்சிட்டு விநியோகிப்பதற்கான செலவுகளை மிச்சப்படுத்த மின்னணு அட்டை உதவும் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது. இது,  வாக்காளர்களும் அதிகப் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அது தெரிவிக்கிறது.

ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?

http://eci-citizen services.nic.in/default.aspx  இந்த இணையதள முகவரிக்குச் சென்று உங்களுடைய கைபேசி எண் மற்றும் உங்களது மின்னஞ்சல் முகவரியைக் கொடுக்கவும். உங்களுடைய  கைபேசிக்கு, ‘verification code’  குறுஞ்செய்தி வரும். அதனை இணையதளத்தில் கொடுப்பதன் மூலம் ஒரு கோரிக்கைப் படிவம் வரும். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைக் கொடுத்த பின்னர் save   என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுடைய செல்பேசிக்கு confirmation  செய்தி வரும். பின்னர், ‘online application’ என்பதை கிளிக் செய்து விவரங்களைக் கொடுக்க வேண்டும்.

http://www.elections.tn.gov.in/eregistration/

இத்தளத்திலும் உங்களுக்குத் தேவையான விண்ணப்பத்தைத் தேர்வு செய்து  விவரங்களைக் கொடுக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ததும் உங்களுக்கு பத்து  இலக்க எண் தரப்படும்.  உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் அதிகாரி உங்களுடைய இல்லத்திற்கு வருகை தந்து சரிபார்த்து அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களுடைய விண்ணப்பம்  அங்கீகரிக்கப்பட்டு பின்னர் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.

Tags : வாக்காளர் அடையாள அட்டை
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...