இது ஐரோப்பியப் பஞ்சாங்கம்!

நம் நாட்டில் நாம் பஞ்சாங்கம் வைத்திருப்பதைப் போலவே ஐரோப்பியர்களுக்கு ஒரு பஞ்சாங்கம் உள்ளது. அதன் பெயர் ‘Old Farmer’s Almanac’. வானியலை அடிப்படையாகக்கொண்ட இதைக் கொண்டுதான் அவர்கள் விவசாயம் செய்வது, தோட்டம் அமைப்பது,  விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது, குறி சொல்வது, ஜாதகம் கணிப்பது உட்பட பல்வேறு சடங்குகளைச் செய்துவந்தார்கள். 1792ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் அச்சிடப்படும்  இது, இன்றும் தொடர்ந்து புழக்கத்தில் உள்ளது. வட அமெரிக்காவின் மிகப் பழைய பத்திரிகை என்ற புகழும் இதற்கு உள்ளது.

இந்த அல்மனாக்கின்படி இவ்வருடம் 2021ல் பன்னிரண்டு பெளர்ணமிகள் உள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது. இதற்கு ஜனவரி முதல் டிசம்பர் வரை முறையே, ஒநாய் நிலவு, பனி நிலவு, புழு நிலவு, ஊதா  நிலவு, பூ நிலவு, ஸ்ட்ராபெர்ரி நிலவு, பூச்சிகள் நிலவு, மீன் நிலவு, அறுவடை நிலவு, வேட்டைக்காரர்கள் நிலவு, எறும்புத்தின்னி நிலவு, குளிர் நிலவு என பலவிதமான பெயர்களும் உள்ளன. மே 29,  நவம்பர் 19, டிசம்பர் 4ம் தேதிகளில் சூரிய, சந்திர கிரகணங்களும் நிகழும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

Related Stories:

>