பொம்மை அதிமுக அரசு : திருநாவுக்கரசர் தாக்கு

நெல்லை,:தமிழக காங்கிரஸ் பிரசார குழு தலைவர் திருநாவுக்கரசர் எம்பி., நெல்லையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டு பாஜ சீட் கேட்டு மிரட்டுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அரசின் செயல்பாடுகள் சரியாக இல்லை. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இரட்டை தலைமை கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்துகிறது. ஊழல் பிரச்னை, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றால் மாநில அரசு திணறி வருகிறது. மத்திய அரசுக்கு பயந்து ெபாம்மையாக அதிமுக அரசு செயல்படுகிறது.தமிழகத்தை பொறுத்தவரை முதல் கூட்டணி திமுக கூட்டணி தான். வரும் சட்டசபை தேர்தலில் அக்கூட்டணி வெற்றிபெற்று திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆவார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>