×

பெண்களை ஆபாச வீடியோ எடுத்த இளைஞர்கள் : புகார் கொடுத்தவர்களை மிரட்டிய அதிமுகவினர்... கோவையில் பரபரப்பு

கிணத்துக்கடவு:கோவை அருகே பெண்களை ஆபாசமாக போட்டோ மற்றும் வீடியோ எடுத்த 4 இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுக்க திரண்டவர்களை அதிமுகவினர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள பனப்பட்டி ஊராட்சியில் சுமார் 250க்கும் மேற்பட்ட அருந்ததியின சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் வசிக்கும் பகுதியில் தனி நபர் கழிப்பிடம், மகளிர் கழிப்பிடம் இல்லாததால் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் இயற்கை உபாதை கழிக்க ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள மயான பகுதிக்கு செல்ல வேண்டி உள்ளது.

நேற்று அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அங்கு சென்றபோது அந்த ஊரை சேர்ந்த 4 இளைஞர்கள் மறைந்திருந்து செல்போன்களில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண்கள் இதுபற்றி வீட்டில் இருப்பவர்களிடம் கூறி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள், நெகமம் காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க திரண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவரும், அவரது கணவரும் அவர்களை அழைத்து, ‘‘புகார் எல்லாம் கொடுக்கக்கூடாது. ஊர் பஞ்சாயத்தில் பேசி தீர்க்கலாம். அதுவரை எதுவும் செய்யக்கூடாது’’ என கூறியதாக தெரிகிறது. பெண்களை புகைப்படம் எடுத்த இளைஞர்கள் அதிமுக.வை சேர்ந்தவர்கள் என்றும், ஊராட்சி தலைவரின் ஆதரவாளர்கள் என்றும் கூறப்படுகிறது.பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த இளைஞர்களை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் வைத்து கொண்டு அருந்ததியின மக்களை அங்கு வரவழைத்து, ‘‘போட்டோ மற்றும் வீடியோக்களை அழித்துவிட்டோம். இனிமேல் அப்படி நடக்காது. இந்த பிரச்னையை இத்துடன் விட்டுவிட வேண்டும்’’ என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், `‘அதிமுக.வை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரும், அவரது கணவரும் பெண்களை போட்டோ எடுத்த அதிமுகவினரை காப்பாற்றுவதற்காக ஊராட்சி மன்ற அலுவலகத்தை கட்ட பஞ்சாயத்து அலுவலகமாக மாற்றி காவல்துறையுடன் சேர்ந்து அருந்ததியினரை மிரட்டி எழுதி வாங்கி உள்ளனர். இது குறித்து போலீஸ் உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த இளைஞர்களை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் வைத்து கொண்டு அருந்ததியின மக்களை அங்கு வரவழைத்து, ‘‘போட்டோ மற்றும் வீடியோக்களை அழித்துவிட்டோம். இனிமேல் அப்படி நடக்காது. இந்த பிரச்னையை இத்துடன் விட்டுவிட வேண்டும்’’ என மிரட்டியதாக கூறப்படுகிறது.

Tags : Youths ,women ,AIADMK ,Coimbatore , அதிமுக
× RELATED டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கைதான நான்கு வாலிபர்களுக்கு சிறை