×

டிராக்டர் பேரணிக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு எதிரொலி!: தலைநகர் எல்லையில் விவசாயிகளுடன் டெல்லி போலீசார் பேச்சுவார்த்தை..!!

டெல்லி: விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில் விவசாயிகள் அமைப்பினருடன் டெல்லி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 55 வது நாளாக தொடர்கிறது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசு பிடிவாதமாக மறுத்து வருவதால் இதுவரை 9 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. 10வது கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் போராட்டத்தை தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக குடியரசு தினத்தன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணியை நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த டிராக்டர் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற டெல்லி காவல்துறையினரின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து பேரணியை கைவிடக்கோரி சிங்கு எல்லையில் விவசாய அமைப்பினரை சந்தித்து டெல்லி காவல்துறை உயரதிகாரிகள் பேசி வருகின்றனர். 26ம் தேதி விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெற்றால் டெல்லியில் குடியரசுத்தின கொண்டாட்டங்கள் பாதிக்கப்படும்.

எனவே டிராக்டர் பேரணியை கைவிட வேண்டும் அல்லது வேறு தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று காவல் அதிகாரிகள் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே டெல்லி பேரணியில் பங்கேற்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்தபடி உள்ளனர். இதனால் டெல்லி எல்லை முழுவதும் டிராக்டர்களே வியாமித்து காணப்படுகின்றன.


Tags : tractor rally ,Supreme Court , Tractor Rally, Capital, Farmer, Delhi Police, Negotiations
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...