செந்துறையில் அதிக வேகத்தில் சென்ற கனரக வாகனங்களை மறித்த இளைஞர்கள்

அரியலூர் : அரியலூர் மாவட்டம் செந்துறை-ஜெயங்கொண்டம் சாலையில் நேற்று அதிக வேகத்துடன் கனரக வாகனங்கள் செல்வதை கண்டித்து இளைஞர்கள் ஒன்றிணைந்து வாகனங்களை மறித்தனர்.மாவட்ட நிர்வாகம் அறிவித்த நேரம் மட்டும் செல்ல வேண்டும், மீறி நகருக்குள் செல்ல கூடாது என வாகன ஓட்டிகளிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலறிந்து வந்த செந்துறை போலீசார் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வாகனத்தை மீட்டு அதிவேகத்தில் வாகனங்களை இயக்க கூடாது. அனுமதிப்பட்ட வேகத்தில் இயக்குமாறு வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதனால் சில மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.இதுபோல் தினமும் குறிப்பிட்ட நேரம் தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் கனரக வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால் லாரிகளில் ஏற்றி செல்லும் சிறு சிறு கற்கள், மண் போன்றவை ரோடுகளில் விழுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படுவது மட்டுமின்றி காற்று மாசு அதிகமாகி வருகின்றது.

வேகத்தடையில் ஒரு வாகனம் கூட வேகத்தை குறைத்து பொறுமையாக செல்வதில்லை. அதிக வேகத்தில் செல்வது பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை உள்ளாகி வருகிறது.

Related Stories: