காரியாபட்டி அருகே புதிய சாலையின் இருபுறமும் விபத்து ஏற்படுத்தும் பள்ளம்

காரியாபட்டி :  காரியாபட்டி அருகே புதியதாக அமைக்கப்பட்ட சாலையின் இருபுறமும் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள பள்ளத்தை சரி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காரியாபட்டி அருகே நெடுங்குளம் முதல் பாப்பணம் விலக்கு வரை செல்லும் சாலை நீண்ட நாட்களாக சரி செய்யாமல் இருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த சாலை சரி செய்து பொது மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டது.

இந்த சாலையைத் தான் ஸ்ரீராம்பூர், முடுக்கன்குளம், சாலை மறைக்குளம், நரிக்குடி, பாப்பணம், நாங்கூர் போன்ற கிராமமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.  ஆனால், புதிதாக போடப்பட்ட சாலையின் இருபுறமும் இரண்டி அடிக்கு மேல் பள்ளம் இருப்பதால் இரண்டு வாகனங்கள் விலக முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக இருப்பதால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் நிலையும் உள்ளது. அதனால் இச்சாலையை சரி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>