பழநியில் 150 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

பழநி : கோயில் நகரான பழநியில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகளவு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதன்படி நகராட்சி ஆணையர் லட்சுமணன் உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் (பொ) வேல்முருகன் தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் காந்தி மார்க்கெட், ராஜாஜி சாலை, சுப்பிரமணியுரம் சாலைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். 80க்கும் மேற்பட்ட கடைகளில் நடந்த சோதனைகளில் சுமார் 150 கிலோ அளவிலான தடை பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

 தொடர் சோதனை நடத்தப்படுமென்றும், தொடர்ந்து விற்பனை செய்பவர்களின் கடை உரிமம் ரத்து, அபராதம் விதிப்பு போன்ற சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துச் சென்றுள்ளனர்.

Related Stories: