ஜன. 22ம் தேதி தமிழக அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை!: சட்டப்பேரவை கூட்டம் தொடர்பாக விவாதிக்க வாய்ப்பு..!!

சென்னை: வருகின்ற 22ம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. சட்டப்பேரவை கூட்டம் கூடவிருக்கும் நிலையில், இது தொடர்பான ஆலோசனையும், ஜெயலலிதா நினைவிட திறப்பு தொடர்பான ஆலோசனை குறித்தும் விவாதிக்கப்படவிருக்கிறது. மிகவும் பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார். முன்னதாக நேற்றிரவு 7:30 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமிதாஷா உடன் முதல்வர் மரியாதை நிமித்தமாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில் தமிழக தேர்தல் அரசியல் குறித்தும், வரக்கூடிய சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் வருகின்ற 22ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 3வது முறையாக அதிமுக தன்னுடைய ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் வரக்கூடிய தேர்தல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு, தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. மேலும் சட்டப்பேரவை கூட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: