×

நெருங்கும் தேர்தல்!: டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு..அரசியல் நிலவரம், புதிய திட்டம் குறித்து ஆலோசனை..!!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழக அரசியல் நிலவரம், புதிய திட்டங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடி வருகின்றனர். தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கவும், வரவுள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து பல்வேறு முக்கிய விஷயங்களை இறுதி செய்யவும் இந்த பேச்சுவார்த்தை உறுதுணையாக இருக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரதமர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சந்தித்திருக்கிறார்கள். நேற்றைய தினம் அமித்ஷா அவர்களை சந்தித்த போது 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது பிரதமரின் இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பானது நிகழ்ந்துள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் விரிவான ஆலோசனை நடத்தவுள்ளனர். இந்த சந்திப்பின் போது, தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க முதல்வர் கோரிக்கை வைக்க வாய்ப்புள்ளது. அதேபோல வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா, மெரினாவில் ஜெயலலிதா நினைவிட திறப்பு உள்ளிட்ட பலத்திட்ட தொடக்கவிழாவிற்கு பிரதமரை அழைக்க வாய்ப்புள்ளது.

மெட்ரோ ரயில் திட்டம், காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் சேதங்களுக்கு நிவாரண தொகையை வழங்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, சட்டமன்ற தேர்தல் மற்றும் தேர்தல் பிரச்சார பயணங்கள் குறித்தும் பிரதமருடன் முதல்வர் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Tags : Palanisamy ,election ,Modi ,residence ,Delhi , Delhi, Prime Minister Narendra Modi, Chief Minister Palanisamy, meeting
× RELATED தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும்...