×

பெண்ணின் கன்னத்தை கடித்தவருக்கு வலை

சென்னை: அமைந்தகரை முத்து இருளாண்டி காலனி 1வது பிரதான சாலையை சேர்ந்தவர் ராணி (47), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவர் இறந்துவிட்டார். தனது இரண்டு மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார். இரண்டு மகன்களும் வெளியூர் வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் எதிர் வீட்டில் வசித்து வரும் இருதயராஜ் (50) மின் ஊழியர் மது போதையில் கடந்த 14ம் தேதி இரவு உதவி கேட்பது போல் நடித்து ராணி வீட்டிற்குள் புகுந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். ராணி அதிர்ச்சியடைந்து வெளியே ஓடிவந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருதயராஜ் ராணியின் கன்னத்தை கடித்து மிரட்டல் விடுத்து தப்பினார். புகாரின்பேரில் சூளைபோலீசார் இருதயராைஜ தேடி வருகின்றனர்.Tags : one , Web for the one who bit the woman's cheek
× RELATED சுருக்குமடி வலை பயன்படுத்தினால் நலத்திட்ட உதவிகள் ரத்து