வீட்டை உடைத்து 14 சவரன் நகை, வெள்ளி கொள்ளை

பொன்னேரி: மீஞ்சூர் காவல் நிலையம் அருகே வேத அம்மாள் டிவிஎஸ் நகர் உள்ளது. அங்கு வசித்து வருபவர் சீனிவாசன் (56) ஓய்வுபெற்ற ரேஷன் கடை ஊழியர். இவரது மனைவி மஞ்சுளா நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார்.

 மகன் கிரிஷ் வீட்டை பூட்டி கொண்டு தனது நண்பரைப் பார்க்க சென்னை திருவொற்றியூர் சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட கொள்ளையன் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த சுமார் 14 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள், எல்இடி டிவி, லேப்டாப்புகள் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Related Stories:

>