கூலித்தொழிலாளி கொலையில் தம்பதி கைது

புழல்: செங்குன்றம் அருகே பெரியார் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா(23), ராகுல்(26), அவரது மனைவி பூஜா(21) ஆகியோர் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தனர்.  பூஜாவுக்கும், கிருஷ்ணாவுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராகுல் கடந்த 14ம் தேதி இரவு குடிபோதையில் கிருஷ்ணாவை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் கிருஷ்ணா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ராகுலும், பூஜாவும் தலைமறைவாகினர். புகாரின்பேரில், செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ராகுல், பூஜாவை தீவிரமாக தேடி வந்தனர். இதனையறிந்த அவர்கள் ஒடிசாவுக்கு தப்பியோடினர்.  இதனையடுத்து, ஒடிசாவுக்கு சென்ற செங்குன்றம் போலீசார், அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தம்பதியை கைது செய்து  அவர்களை நேற்று முன்தினம் சென்னைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ராகுலை புழல் சிறையிலும், பூஜாவை மகளிர் சிறையிலும் அடைத்தனர்.

Related Stories:

>