×

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதியில் 9 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு: இழப்பீட்டு தொகை 11 லட்சம் வசூல்

சென்னை: செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் பகுதியில் 9 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் 11 லட்சம் இழப்பீடு வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அமலாக்க அதிகாரிகள், சென்னை தெற்கு மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட அடையாறு பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 9 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால், 10 லட்சத்து 35 ஆயிரத்து 405 இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்பு கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து, அதற்குரிய சமரச கூடுதல் தொகை 75,000 செலுத்தியதால், அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யவில்லை. பொதுமக்கள், இதுபோன்ற மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை செயற்பொறியாளர்/ அமலாக்கம்/ சென்னை கைபேசி 94458 57591  என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags : Chengalpattu ,power thefts ,Kanchipuram , 9 power thefts detected in Chengalpattu, Kanchipuram area: 11 lakh compensation collected
× RELATED செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில்...