தமிழகத்தில் வாரம் முழுவதும் தடுப்பூசி: சுகாதாரத்துறை அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் வாரம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என்று சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்தார். இது தொடர்பாக தமிழக சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது : மற்ற சுகாதார பணிகள் பாதிக்காத வகையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசியினை ஒருநாள் இடைவெளிவிட்டு அளிக்க மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக பெரிய மாநிலங்களில் வாரத்தில் 4 நாட்களுக்கு மேலும், சிறிய மாநிலங்களில் 4 நாட்களும், யூனியன் பிரதேசங்களில் 2 நாட்களும் தடுப்பூசி போட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் வாரத்தில் 7 நாட்களுக்கு தடுப்பூசி போட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தடுப்பூசியின் 1 வயலில் 10 பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். சில நேரங்களில்  10க்கும் குறைவான நபர்கள் மட்டுமே இருக்கும்பட்சத்தில் வயலில் இருக்கும்  மீதி மருந்து பயனற்றதாகிவிடுகிறது. இதனால் இந்த நடைமுறையை பின்பற்ற  அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாரம் முழுவதும் காலை 10 மணி முதல் மாலை 5மணி வரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>