தமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் புதிதாக 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று 50,501 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை லண்டனில் இருந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்த 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேருக்கு உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைச் சேர்த்து தமிழகத்தில் 8,31,323 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 758 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது வரை 8,13,326 பேர் குணமடைந்துள்ளனர். 5,725 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 8 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் அரசு மருத்துவமனையில் 3 பேரும் தனியார் மருத்துமனையில் 5 பேரும் மரணம் அடைந்துள்ளனர். இதைச் சேர்த்து மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 12,272 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories:

>