தமிழகத்தில் இதுவரை 16,462 பேருக்கு கொரோனா தடுப்பூசி: சென்னையில் மட்டும் 1,746 பேர்; சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் 3 நாட்களில் 16,462 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் முதல் 160 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு மையத்தில் தினசரி 100 பேருக்கு தடுப்பூசி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் தடுப்பூசி 3 கட்ட ஆய்வில் இருப்பதால் சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி போடுவதில் தயக்கம் காட்டினர். இணையதளத்தில் பதிவு செய்வதிலும் கோளாறுகள் ஏற்பட்டது. இதனால் பதிவு செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை. இதனால் 16 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டிய நிலையில் குறைவான நபர்களுக்கோ போடுகின்றனர்.

இதையடுத்து கடந்த இரண்டு நாட்களில் தமிழகம் முழுவதும் கோவிஷீல்டு 5,874 பேருக்கும், கோவேக்சின் 282 பேர் என கோவிஷீல்டு, கோவேக்சின் 6,156 பேருக்கு போடப்பட்டது. இந்நிலையில் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும், பயத்தை போக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் 171 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர்.  அதன்படி கோவிஷீல்டு 10,051 பேருக்கும், கோவேக்சின் 177 பேருக்கும் போடப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில் கோவிஷீல்டு, கோவேக்சின் என 16,462 பேருக்கு போடப்பட்டுள்ளது. மேலும் ஒரு நாளைக்கு 16 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டிய நிலையில் மக்களிடையே நம்பிக்கை இல்லாததால் மூன்று நாட்கள் சேர்த்து 16,462 பேருக்கு மட்டுமே போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னையில் உள்ள 12 மையங்களில் நேற்று மட்டும் 801 பேருக்கு ெகாரோனா தடுப்பூசி போடப் பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இதுவரை 1,746 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories:

>