வடகிழக்கு பருவமழை இன்றுடன் விடை பெறுகிறது

சென்னை: தமிழகத்தில் அக்டோபர் மாதம் 20ம் தேதி தொடங்க வேண்டிய வட கிழக்கு பருவமழை இந்த ஆண்டு அக்டோபர் 2வது வாரத்தில் தான் தொடங்கியது. லேசான மழைதான் பெய்து வந்தது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் 3 புயல்களுடன் தமிழகத்துக்கு நல்ல மழையை கொடுத்தது. இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல மாவட்டங்களில் இந்த ஆண்டு இயல்பைவிட கூடுதலாவே மழை பெய்துள்ளது. இந்நிலையில் டிசம்பர் மாதம் முடிவுக்கு வர வேண்டிய பருவமழை இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை நீடித்தது. குறிப்பாக ஜனவரி 16ம் தேதி வரை மழை நீடித்தது யாரும் எதிர்பாராத ஒன்று. இ்ந்நிலையில் இன்றுடன் இந்த பருவமழை முடிவுக்கு வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Related Stories:

>