மதுரை திருமங்கலத்தில் ஜெயலலிதாவுக்கு கோயில் 30ம் தேதி திறப்பு: இபிஎஸ், ஓபிஎஸ் திறந்து வைக்கின்றனர்

சென்னை: ஜெயலலிதா பேரவையின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், அம்மா பேரவையின் மாநில செயலாளரும் வருவாய் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சென்னை, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அமைச்சர் உதயகுமார் கூறியதாவது: வருகிற பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதாவின் 73வது பிறந்த தினம். மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கூ.கல்லுப்பட்டியில் உள்ள டி.குன்னத்தூரில் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோயில் வருகிற 30ம் தேதி திறக்கப்பட உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கோயிலை திறந்து வைக்க உள்ளனர். இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற பேரவை மாவட்ட செயலாளர்கள் உழைத்திட வேண்டும் என்றார்.

Related Stories:

>