×

குமரி எல்லை அருகே 2 சிறுமிகள் பலாத்காரம் தந்தை, மகன் கைது

திருவனந்தபுரம்: குமரி எல்லை அருகே கேரளாவில் 7, 11 வயது சிறுமிகளை பலாத்காரம் செய்த சம்பவத்தில் தந்தை, மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள-குமரி எல்லையான வெள்ளறடை குடையால் பகுதியை சேர்ந்தவர் பாலராஜ் (71). அவரது மகன் ராஜ் (40). கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 பேரும் அந்த பகுதியை சேர்ந்த 11, 7 வயதான 2 சிறுமிகளை மிரட்டி பலாத்காரம் செய்து உள்ளனர். இதில் சிறுமிகளுக்கு உதிரப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 2 சிறுமிகளையும் நெய்யாற்றின்கரையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நடத்திய பரிசோதனையில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து வெள்ளறடை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Tags : girls ,border ,Kumari , Father, son arrested for raping 2 girls near Kumari border
× RELATED கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா