இந்து மதத்திற்கு எதிரான கருத்து ‘தாண்டவ்’ வெப் சீரிஸ் உபி போலீஸ் வழக்கு பதிவு

லக்னோ: இந்த மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக ‘தாண்டவ்’ வெப் சீரிசில் மீது கொடுக்கப்பட்ட புகாரை தொடர்ந்து இயக்குனர் மற்றும் சீரியலை வெளியிட்ட அமேசானின் இந்திய பிரிவுதலைவர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘தாண்டவ்’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட வெப் சீரியல் வெள்ளியன்று அமேசான் பிரைமில் வெளியானது. இதில் பாலிவுட் நடிகர் சயீப் அலி கான், டிம்பிள் கபாடியா, சுனில் குரோவர், திக்மன்சு துலியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 17 நிமிடங்கள் ஓடும் முதல் எபிசோட்டில் இந்து கடவுள்களை இழிவுபடுத்தப்படும் வகையிலான காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் வார்த்தைகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. சாதி உணர்வுகளை தூண்டிவிடும் வகையில் இருப்பதாகவும் உத்தரப்பிரதேசத்தின் ஹஸ்ரத்கன்ச் கோட்வாலி காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தாண்டவ் வெப் சீரியல் இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர், தயாரிப்பாளர், கதையாசிரியர், நடிகர்கள் மற்றும் அமேசான் பிரைம் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அபர்ணா புரோகித் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜ எம்பி மனோஜ் கோடாக் ஞாயிறன்று அமேசானில் வெளியான தாண்டவ் வெப் சீரியல் தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி இருந்தார். இதன் எதிரொலியாக அமேசான் பிரைம் இந்தியா நிறுவனம் விளக்கமளிக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் சம்மன் அனுப்பி உள்ளது.

Related Stories: