ரூ1 கோடி லஞ்சம் வாங்கிய ரயில்வே அதிகாரி கைது

கவுகாத்தி: ரயில்வே ஒப்பந்தங்களை சாதகமாக வழங்குவதற்காக ரூ.1 கோடி லஞ்சம் வாங்கிய, ரயில்வே பொறியாளர் சேவை பிரிவு (ஐஆர்இஎஸ்) அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அசாம் மாநிலம் மலிகோவானில் உள்ள வடகிழக்கு முன்னணி ரயில்வேயில் பணிபுரிபவர் மகேந்தர் சிங் சவுகான். இவர், 1985ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த ஐஆர்இஎஸ் அதிகாரி. இவர் ரயில்வே ஒப்பந்தத்தை, தனியாருக்கு வழங்குவதில் சாதகமாக நடந்து கொள்வதற்காக ரூ.1 கோடி லஞ்சம் பெற முயன்ற போது, சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

இவ்விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும்  22 இடங்களில் சோதனையும்  நடத்தப்பட்டது. சவுகான் மற்றும் அவரது இரு கூட்டாளிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி, உத்தரகண்ட், சிக்கிம், அசாம் மற்றும் பிற மாநிலங்களில் 21 இடங்களில் சிபிஐ குழு சோதனை நடத்தியது. லஞ்சத் தொகை மற்றும் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை சிபிஐ கைப்பற்றி விசாரித்து வருகிறது.

Related Stories: