இளையராஜா அவமானப்படுத்தப்பட்டத்தை அரசு வேடிக்கை பார்த்தது: இசையமைப்பாளர் தினா குற்றச்சாட்டு

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவை பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் அவமதித்த விவகாரத்தை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்று இசையமைப்பாளர் தினா குற்றம் சாடியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; பிரசாத் ஸ்டூடியோவின் இடத்தை இளையராஜா கேட்கிறார் என்பது தவறான தகவல். 45 ஆண்டுகள் இசையமைத்து வந்த இடத்திற்குள் இளையராஜாவை நுழைய விடாமல் தடுத்த பிரசாத் ஸ்டூடியோ இசை கருவிகள் இசை கோப்புகளை கூட எடுக்க விடாமல் அவமானப்படுத்தி வெளியேற்றியதாக விமர்சனம் செய்தார்.

தனது பொருட்களை எடுக்க அனுமதி கேட்டு இளையராஜா நீதிமன்றம் நாடியதாக அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டின் மூத்த இசை கலைஞருக்கு நேர்ந்த இந்த அவமானத்தை தமிழக அரசு வேடிக்க்கை பார்ப்பதாக குற்றம் சாட்டினார். இந்த நிகழ்வுகளால் இளையராஜா கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக தெரிவித்த தினா  மத்திய மாநில அரசுகள் வழங்கிய விருதுகளை திருப்பி அனுப்பும் மன நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

Related Stories: