ரேகைகளை அழிக்கும் விநோத நோய்

உள்ளங்கைகள், பாதங்களில் உள்ள ரேகைகள் ஒவ்வொரு மனிதருக்கு ஒவ்வொரு மாதிரியானவை என்பதறிவோம். இந்தத் தனித்தன்மையைக் கொண்டுதான் ஒவ்வொரு மனிதரையும் இன்னார்தான் இவர் என்று அடையாளம் கண்டு, நாம் இந்த நவீன சமூகத்தில் ஓட்டுப் போடுவது முதல் ஒப்பந்தங்கள் செய்வது வரை பல காரியங்களையும் செய்துகொண்டிருக்கிறோம்.

ஆனால் -

ரேகைகளை மட்டும் அழித்துவிடும் விநோத நோய் ஒன்று உலகில் கண்டறியப்பட்டுள்ளது. ‘அடர்மடோக்லியோஃபியா இதுதான் அந்த நோயின் பெயர். பரம்பரையாகத் தொடரும் மரபணு நோயான இது ஒருவருக்கு வந்தால் தலைமுறையாகத் தொடரும் என்பதுதான் பெருந்துயரம். முதன் முதலில் 2007ம் ஆண்டு சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தோல் மருத்துவர் ஒருவர்தான் இந்த விநோத நோயைக் கண்டறிந்தார். அமெரிக்கா செல்ல தன்னால் தன் விரல் ரேகைப் பதிவைச் செய்ய முடியவில்லை என்கிற வித்தியாசமான பிரச்சனையோடு, தோல்நோய் மருத்துவரிடம் வந்தார் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர். அவரைப் பரிசோதித்ததில் அவரின் தோலின் மேற்புறம் உள்ள டெர்மிஸில் ரேகைகள் எனும் நுண்மடிப்புகளே இல்லாமல் வழுவழுவென இருப்பதைப் பார்த்தார். உடனடியாக அவரது குடும்பத்தை சேர்ந்த பதினாறு பேரை பரிசோதனை செய்ததில், ஏழு பேர் இயல்பாக இருந்தனர். மற்ற ஒன்பது பேருக்கும் இந்த பாதிப்பு இருப்பதையும் உறுதி செய்தார். பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு இப்படி ஒரு அரிதான நோய் இருப்பதைக் கண்டறிந்தார்கள்.

இதைப் பற்றி மருத்துவப் பேராசிரியர் இட்லின் கூறும்போது, ’இவர்களுக்கு ‘ஸ்மார்கேட் 1‘ என்ற மரபணுவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த விநோதமான சிக்கல் உருவாகியுள்ளது. இதுவரை உலகில் மிகச் சில குடும்பங்களே இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.சமீபத்தில் பங்களாதேஷின் ராஜ்ஷாஹி மாவட்டத்தில் உள்ள அபு என்பவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இந்த விநோத நோய் தாக்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. கடவுச்சீட்டு பெற விண்ணப்பிக்கச் சென்றபோது, அவரது விரல் ரேகைகளைப் பதிவு செய்ய முடியாமல், அதிகாரிகள் அவரது விண்ணப்பத்தை நிராகரித்

திருக்கிறார்கள்.  ஓட்டுநர் உரிமமும் அவரால் பெற இயலவில்லை. அப்போது தான் அபுவுக்கு அடர்

மடோக்லியோஃபியாவின் இன்னொரு வகையான பிரச்னைதான் இது என்பதை மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஒட்டுவதால் ஒவ்வொரு முறையும் மருத்துவச் சான்றிதழ் இருந்தாலும் காவலர்களுக்குக் கப்பம் கட்டுவது முதல், ஜியோ சிம்கார்டுகூட வாங்க முடியாமல் சிரமப்படுவது வரை அன்றாட வாழ்வில் நிறைய சிக்கல்களை இந்நோயால் எதிர்கொள்கிறார் அபு.

Related Stories: