×

சாம்பார் :தன் வரலாறு கூறுதல்

இந்தத் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதச் சொன்னால் சாம்பார் என்ன மொழியில் எழுதும் என்று நினைக்கிறீர்கள். நிச்சயமாகத் தமிழில் இல்லை. அதைப் போலவே எந்த தென்னிந்திய மொழிகளிலும் இல்லை. பிறகு, அநேகமாய் மராட்டியில் எழுதக்கூடும்.துணுக்குற வேண்டாம். சாம்பார் என்ற உணவை நாம் உருவாக்கவில்லை. மராட்டியத்தைப் பூர்விகமாகக்கொண்ட சரபோஜி மன்னர்களின் தஞ்சாவூர் அரண்மனையிலேயே உலகின் முதல் சாம்பார் உருவானது. வீர சிவாஜியின் வாரிசுகளான சரபோஜிகள் மிகச் சிறந்த போர் வீரர்கள் மட்டும் அன்று நல்ல உணவுப் பிரியர்களும்கூட. அக்கால சரபோஜி மன்னர்கள் வெள்ளையரோடு மோதாமல் நட்புறவாகவே இருந்தனர். அதனால், சரபோஜிகளின் அரண்மனையில் சைவ உணவுக் கூடங்களோடு, அசைவ உணவுக் கூடங்களும் ஆங்கிலேயருக்கான சிறப்பு உணவுக் கூடங்களும் இருந்தன.

பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சாஹூஜி என்ற சரபோஜி மன்னர் தஞ்சையை  . சாஹுஜிக்கு ‘அமிதி’ என்ற புளிக்குழம்பு மிகவும் பிடிக்கும். மராட்டியர்கள் நம் ஊர் புளியைக்கொண்டு புளிக்குழம்பு வைக்கமாட்டார்கள். கோகம் என்ற புளியைப் பயன்படுத்துவார்கள். ஒருமுறை, கோகம் தீர்ந்துபோகவே தமிழகத்துப் புளியை வைத்து துவரம் பருப்பு, காய்கறிகள் சேர்த்து ஒரு உணவைத் தயாரித்தனர். அதிர்ஷ்டவசமாக மன்னருக்கு அதன் ருசி பிடித்துவிடவே அதை அடிக்கடி தயாரிக்கச் சொல்லியிருக்கிறார். அந்த உணவுக்கு ஷாம்பாஜி என மன்னரின் பெயரையே வைத்தார்களாம். அநேகமாய் அதுதான் சாம்பார் என்று மாறியது என்கிறார்கள். தஞ்சை சரஸ்வதி மகாலில் சரபோஜி மன்னர்கள் காலத்தில் எழுதப்பட்ட போஜன குதூகலம், சரபேந்திர பக்ஷன சாஸ்திரம் போன்ற நூல்களில் சாம்பார் பற்றிய குறிப்புகள் உள்ளன.



Tags : Sambar
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...