×

ரஷ்யாவில் மீத்தேனில் இயங்கும் மறுபயன்பாட்டு ராக்கெட் எஞ்சின் தயாரிப்பு

ரஷ்யாவின் புதிய மறு பயன்பாட்டு ராக்கெட் எஞ்சின் 50 முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் திறனைக் கொண்டதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய விண்வெளி முகமையான ரோஸ்காஸ்மோஸ் இணையத்தளத்தில், ஆமுர் எஸ்பிஜி நடுத்தர வகையைச் சேர்ந்த ராக்கெட்டைச் செலுத்த மீத்தேனை எரிபொருளாகக் கொண்ட எஞ்சினைத் தயாரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த எஞ்சினின் முதற்கட்டம் பத்து முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் திறனுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், 50 முறை பயன்படுத்தும் வகையில் இதை மேம்படுத்தும் வழிகளைப் பரிசீலித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
             


Tags : Russia , Rocket engine
× RELATED வேலூர் கூட்டுறவு பால் உற்பத்தி...