குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் ஜன.20, 22, 24, 26ல் போக்குவரத்து மாற்றம் !

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் வருகின்ற ஜனவரி 20, 22, 24, 26 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 26 உள்ளிட்ட 4 நாட்களில் காலை 6-10 மணி வரை வாகனங்களுக்கு அனுமதியில்லை என்று போக்குவரத்து காவல் தெரிவித்துள்ளது. வாலாஜா பாய்ண்ட், அண்ணாசாலை சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் வர அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: