பழநி காந்தி மார்க்கெட்டை கலக்கும் காய்கறி திருடன்: சிசிடிவி காட்சியால் பரபரப்பு

பழநி: பழநி காந்தி மார்க்கெட்டில் காய்கறிகளை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி நகரின் மையப்பகுதியில் காந்தி மார்க்கெட் உள்ளது. இங்கு காய்கறி, மளிகை, திண்பண்டம், இறைச்சி, மீன், கருவாடு என அனைத்து வகை கடைகளும் உள்ளன. இதனால் அதிகாலை துவங்கி இரவு வரை பழநி காந்தி மார்க்கெட்டில் வாடிக்கையாளர் கூட்டம் அதிகளவு இருக்கும். ஒரு கடையில் பொருள் வாங்கும் நபர், அதனை தனது வாகனத்தில் வைத்து விட்டு அடுத்த கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவது வழக்கம்.

இந்நிலையில் பழநி காந்தி மார்க்கெட்டில் தற்போது வாகனங்களில் வைக்கப்படும் காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் திருடப்படும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. காய்கறிகள் என்பதால் பறிகொடுத்தவர்கள் போலீசில் புகார் ஏதும் கொடுப்பதில்லை. இந்நிலையில் பழநி காந்தி மார்க்கெட்டின் பின்புறம் பைக்கில் வைக்கப்பட்டிருந்த காய்கறிகளை லுங்கி கட்டி, நீலநிற சட்டை அணிந்து, தலையில் குல்லா போட்டிருந்த நபர் ஒருவர் திருடிச் செல்லும் காட்சி அங்குள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போலீசார் காந்தி மார்க்கெட் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: