வால்பாறையில் படகு இல்லம், பூங்கா பணிகளை அடுத்த மாதத்திற்குள் முடிக்க திட்டம்

வால்பாறை:  வால்பாறை பகுதியில் ரூ.50 கோடி அளவில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பூங்கா மற்றும் படகு இல்லத்திற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.  வால்பாறை பகுதி பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையான  பூங்கா மற்றும் படகு இல்ல பணிகளை பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

வால்பாறையில்  பி.ஏ.பி காலனியில் பொதுப்பணித்துறை இடத்தில், வால்பாறை நகராட்சியால் 4.26 ஏக்கர் பரப்பளவில், 2.58 கோடி செலவில் தாவரவியல் பூங்கா பணியும், நகராட்சி ஆய்வு மாளிகை பகுதியில் நகராட்சி இடத்தில் 4.2 ஏக்கர் பரப்பில், ரூ.3.47 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை பணிகளும் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டால் வால்பாறை சுற்றுலா மேம்பாட்டிற்கான முதல்படி எனக் கூறலாம். இந்நிலையில் வால்பாறையை சுற்றுலாத்தலமாக அறிவிப்பதோடு, அங்கு சுற்றுலா அலுவலகம் திறக்கப்பட வேண்டும் என்பது சுற்றுலா ஆர்வலர்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: