10, 12-ம் வகுப்பு நாளை திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் ஆய்வு

சென்னை: சென்னை ஷெனாய் நகரில் உள்ள திருவிக மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். எனவே அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என கூறினார். மேலும் உடல்வெப்ப பரிசோதனைக்கு பிறகே வகுப்புகளில் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். இந்நிலையில் பள்ளிகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என கூறினார். பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பள்ளி வகுப்பறைகளில் சானிடைசர் வைக்கப்பட்டுள்ளன என கூறினார்.

ஒரு வகுப்பறையில் 20 முதல் 25 மாணவர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் வருகையை கட்டாயமாக கூடாது எனவும், விருப்பத்தின் பேரில் பெற்றோரின் இசைவு கடிதம் பெற்று மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் ஆகியவற்றை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்க வேண்டும்? என்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு தெரிவித்து இருந்தது. இதை கண்காணிக்க கல்வித்துறை அதிகாரிகள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று ஆய்வு செய்கின்றனர் என கூறினார்.

கல்லூரி கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை:

அரசு கல்லூரி பணியாளர்கள் தங்களின் குறைகளை வாட்ஸ் அப் குழுக்களில் பதிவு செய்யக்கூடாது என கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. கல்லூரி வளாகம், அலுவலக குறைபாடுகளை மேல் அலுவலர்களிடம் மட்டுமே முறையிட வேண்டும் என கூறினார். மீறினால் சைபர் கிரைம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: