தாண்டவ் வெப் சீரிஸ்!: இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்தியதற்கு எதிர்ப்பு..அமேசான் பிரைமிற்கு தகவல் ஒளிபரப்புத்துறை நோட்டீஸ்..!!

டெல்லி: தாண்டவ் வெப் சீரிஸ், இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்தியதாக எழுந்த புகார் குறித்து விளக்கம் அளிக்கும்படி அமேசான் பிரைமிற்கு தகவல் ஒளிபரப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் நடிப்பில் அமேசான் பிரைம் ஓடிடி தலத்தில் ஓடி கொண்டிருக்கும் வெப் சீரிஸ் தாண்டவ். முகமத் சேஷன் நாயக், டிம்பிள் கபாடியா, சுனில் க்ரோவர், டிக்மான்ஷு துலியா, கிருத்திகா கம்ரா உட்பட பலர் நடித்திருக்கும் இந்த தொடரை அலி அப்பாஸ் இயக்கி இருக்கிறார். தொடர் இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்துவதாக தொடர் குற்றசாட்டுகள் எழுந்து வந்தது. தாண்டவ் தொடரை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பேன் தாண்டவ் என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.

இந்நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்களும் வெப் தொடர் குழுவினருக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மேற்கு காட்கோபர் தொகுதி எம்.எல்.ஏ ராம் கதம் இந்தத் தொடர் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் என்பதால் அதை அகற்ற வேண்டும் என்று கோரினார். தொடர்ந்து மும்பை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 295A மற்றும் 67A பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்தியதாக எழுந்த புகார் குறித்து விளக்கம் அளிக்குமாறு தகவல் ஒளிபரப்புத்துறை அமேசான் பிரைம் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Stories:

>