சீருடை, பழைய பாஸ் இருந்தாலே மாணவர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்!: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் நாளை திறக்கப்படும் நிலையில், 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பொங்கல் விடுமுறை முடிந்து நாளை முதல் தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று மொத்தம் 11,600 பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு வரவுள்ளனர்.

இதில், 10ம் வகுப்பில் 10 லட்சம் மாணவர்களும், 12ம் வகுப்பில் 8 லட்சம் மாணவர்கள் என மொத்தம் 18 லட்சம் மாணவர்கள் நாளை முதல் பள்ளிவரவுள்ளனர். நண்பர்களுடன் உணவை பகிர்ந்து சாப்பிட கூடாது, விளையாட்டுப்பிரிவு கிடையாது. மாணவர்கள் சமூக இடைவெளியுடன் பழக வேண்டும் என்பன போன்ற விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் விதமாக மல்டி வைட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் சுகாதாரத்துறையினர் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் சீருடை மற்றும் பழைய பஸ் பாஸ் வைத்திருந்தால் போதும். அவர்கள் கட்டணமின்றி இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்தார்.

Related Stories: