உலக கொரோனா நிலவரம்: 20 லட்சத்தை தாண்டியது உயிரிழந்தோர் எண்ணிக்கை

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 218 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட போதும் கொரோனா வைரஸ் உருமாறி வேகமாக பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, 9 கோடியே 54 லட்சத்து 79 ஆயிரத்து 062 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 2 கோடியே 52 லட்சத்து 72 ஆயிரத்து 300 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 214 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனாவில் இருந்து 6 கோடியே 81 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 20 லட்சத்து 39 ஆயிரத்து 601 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 407,202

பிரேசில் - 209,868

இந்தியா - 152,456

மெக்சிகோ - 140,704

இங்கிலாந்து - 89,261

இத்தாலி - 82,177

பிரான்ஸ் - 70,283

ரஷியா - 65,566

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

அமெரிக்கா - 14,428,351

இந்தியா - 10,210,697

பிரேசில் - 7,411,654

ரஷியா - 2,960,431

துருக்கி - 2,262,864

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - 24,482,050

இந்தியா - 10,572,672

பிரேசில் - 8,488,099

ரஷியா - 3,568,209

இங்கிலாந்து - 3,395,959

Related Stories:

>