காலில் அறுவை சிகிச்சை: கமல் கட்டாய ஓய்வு

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கை: மநீம சார்பில் முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்துள்ளேன். 5 பாகங்களாக 5 ஆயிரம் கி.மீ பயணித்து தமிழ் மக்களை சந்தித்துள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில், எனது காலில் அறுவை சிகிச்சை செய்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அதுவரை ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால், அதை மீறியே சினிமா பணிகளையும், அரசியல் பணிகளையும் மேற்கொண்டேன். பிரசாரம் தொடங்கும்போதே எனது காலில் அதிக வலி இருந்தது. அதற்கு மக்களின் அன்பே மருந்தாக அமைந்தது. இப்போது சிறிய ஓய்வு கிடைத்துள்ளது. எனவே, காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறேன். சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் என் பணிகளை புதிய உத்வேகத்துடன் தொடங்குவேன். மக்களை நேரில் சந்திக்க முடியாது. இந்த மருத்துவ விடுப்பில் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், வீடியோ வாயிலாகவும் உங்களுடன் பேசுவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>