×

வன்னியர் இடஒதுக்கீடு கோரி கலெக்டர் அலுவலகங்கள் முன்பு 29ம் தேதி போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

சென்னை: வன்னியர் இட ஒதுக்கீடு கோரி கலெக்டர் அலுவலகங்கள் முன் வரும் 29ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:  வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டுக் கோரிக்கையை வலியுறுத்தும் தொடர் போராட்டங்களின் அடுத்தகட்டமாக வரும் 29ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களின் கலெக்டர் அலுவலகங்கள் முன்பாக பாமக- வன்னியர் சங்கம் சார்பில்  மக்கள்திரள் போராட்டம் நடைபெறும்.

பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், பிற கட்சிகளைச் சேர்ந்த வன்னியர்கள் இந்த மக்கள் திரள் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்ற நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி பாமக இன்னும் களப் போராட்டத்தை தொடங்கவில்லை. கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி இப்போது வரை 5 கட்டங்களாக அதிகாரிகள் வழியாக அரசுக்கு கோரிக்கை மனுக்களை கொடுக்கும் நிகழ்வுகளைத் தான் நடத்திக் கொண்டிருக்கிறோம். அடுத்து 29ம் தேதி நடைபெறவிருக்கும் ஆறாம் கட்டப் போராட்டத்திற்கு முன்பாக வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்ற நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், 29ம் தேதி போராட்டத்திற்குப் பிறகு பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் உயர்நிலை அமைப்புகள் கூடி அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : protest ,offices ,announcement ,Collector ,Vanniyar ,Ramadas , 29th protest in front of Collector's offices demanding Vanniyar reservation: Ramadas announcement
× RELATED நகர திமுக அலுவலகம் திறப்பு