×

ராமதாசின் சகோதரர் காலமானார்

திண்டிவனம்: ராமதாசின் இளைய சகோதரர் நேற்று காலமானார். பாமக நிறுவனர் ராமதாசின் இளைய சகோதரர் எஸ்.சீனிவாசன் என்ற சீனிவாசக்கவுண்டர் (74). விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வகாப் நகரில் வசித்து வந்த இவர், நேற்று மதியம் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இன்று பிற்பகலில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. சீனிவாசக்கவுண்டர் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


Tags : Ramadas ,brother , Ramadas' brother passed away
× RELATED திடீர் மழையால் சேதமடைந்த நெல்...