×

புக்கிங் செய்த 30 நிமிடத்தில் வீட்டுக்கு காஸ் சிலிண்டர்: ஐஓசி விரைவில் அறிமுகம்

சென்னை: தமிழகம் முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை 1.36 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்த 2 அல்லது 3 நாட்களுக்கு பிறகே கேஸ் ஏஜென்சிகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒன்று அல்லது 2 சிலிண்டர்கள் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் காலியான சிலிண்டர்களை திரும்ப அளித்த பிறகே புதிய சிலிண்டரை பெறமுடியும்.
இந்தநிலையில் பிப்ரவரி 1ம் தேதி முதல் புதிய சிலிண்டர் புக்கிங் செய்தவுடனே அடுத்த சிலிண்டரை டெலிவரி செய்யும் தட்கல் முறையை அமல்படுத்தவுள்ளனர். இந்த முறையில் வாடிக்கையாளர் புக்கிங் செய்த நாளிலேயே அவர்களின் வீட்டிற்கு சிலிண்டர் டெலிவரி ஆகிவிடும். ’தட்கல் எல்பிஜி சேவா’ மூலம் வெறும் அரை மணி நேரத்தில் வீட்டுக்கு சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags : IOC , Gas cylinder for home within 30 minutes of booking: IOC coming soon
× RELATED 4 ஆண்டில் அனைத்து பைக்குகளும்...