அதானியின் துறைமுக விரிவாக்க திட்டம் கார்ப்பரேட் கொள்ளைக்கு அரசு துணைபோகக் கூடாது: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: எல் அண்ட் டி நிறுவனத்தின் சிறிய துறைமுகத்தை 2018ல் அதானி குழுமம் வாங்கியது. அதனை ஒரு பெரும் வர்த்தக துறைமுகமாக சுமார் 6000 ஏக்கர் அளவில் விரிவாக்கம் செய்ய அதானி குழுமம் திட்டம் தயாரித்துள்ளது. சுமார் 53 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்படவுள்ள இந்த துறைமுகத்தின் சுற்றுச்சூழல், சூழல் தாக்க மதிப்பு ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகள் முழுமையாக தமிழில் மக்களிடம் கிடைக்க வழிவகை செய்யாமல் கருத்துக்கேட்பு கூட்டம் வரும் 22ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் மக்கள் அதிகமாகவுள்ள காட்டுப்பள்ளியில் கருத்துகேட்பு கூட்டம் நடத்தாமல் மீஞ்சூரில் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த திட்டத்தால் தமிழக வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சிக்கும் வழியில்லை. வெறும் 1500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால், அதானி பெரும் லாப வேட்டை நடத்திட இந்த திட்டம் வாய்ப்பை ஏற்படுத்தும். இந்த கார்ப்பரேட் கொள்ளைக்கு அரசு துணைபோகக் கூடாது.

Related Stories: