×

கலைஞர் அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: கலைஞர் அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியை திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாய் வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கும் வட்டித் தொகையை கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை வழங்கிய நிதி ரூ.5 கோடியே 19 லட்சத்து 90 ஆயிரம். 2020, டிசம்பர் மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவு காசோலையாக அனுப்பப்படுகிறது.

Tags : Rs 2 lakh financial assistance to 8 people on behalf of the Artist Foundation: MK Stalin provided
× RELATED தினமும் பொய் பேசும் அரசியல் காமெடியன் அண்ணாமலை: திருமாவளவன் விளாசல்