வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கவர்னர் மாளிகை நோக்கி இன்று பேரணி: காங்கிரஸ் சார்பில் நடக்கிறது

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி காங்கிரஸ் சார்பில் இன்று சைதாப்பேட்டையிலிருந்து கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடக்கிறது. மத்திய பாஜ அரசின் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரியும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை பல மடங்கு மக்கள் மீது சுமையை ஏற்றியதை கண்டித்தும் சென்னை, சைதாப்பேட்டை சின்னமலை அருகில் உள்ள ராஜிவ்காந்தி சிலை அருகில் காங்கிரஸ் சார்பில் இன்று காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

அதை தொடர்ந்து கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடக்கிறது. காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயக்குமார் எம்பி தலைமை வகிக்கிறார். இதில் செயல் தலைவர் விஷ்ணுபிரசாத், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ.ராஜசேகரன், ஜெ.டில்லிபாபு, முத்தழகன், எம்.பி.ரஞ்சன்குமார், அடையாறு டி.துரை, நாஞ்சில் பிரசாத், ஏ.ஜி.சிதம்பரம், டி.ரமேஷ், ஆர்.எஸ். செந்தில்குமார், ஆர்.சுந்தரமூர்த்தி மற்றும் ஏ.வி.நாகராஜன் முன்னிலை வகிக்கின்றனர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தலைவர்கள் மற்றும் அணியினர் பங்கேற்கின்றனர்.

Related Stories: