ஜி-7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க மோடிக்கு போரிஸ் அழைப்பு

புதுடெல்லி: டெல்லியில் வரும் 26ம் தேதி நடைபெறும் குடியரசு தினவிழாவில் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்தார். ஆனால், அந்நாட்டில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசின் பரவல் அதிகமாக இருந்ததால், தனது இந்திய பயணத்தை போரிஸ் ரத்து செய்தார். இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் உள்ள கார்ன்வால் மாகாணத்தில் வரும் ஜூன் மாதம் ஜி-7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில், பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய பொருளாதார வளர்ச்சி கண்ட 7 நாடுகள் பங்கேற்கின்றன. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories:

>