மின் கம்பி உரசியதால் தீப்பிடித்து எரிந்த பஸ்: 6 பேர் கருகி பலி, 30 பேர் காயம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், பார்மரின் நகோடா பகுதியில் இருந்து அஜ்மெர் பிவார் நோக்கி கடந்த சனியன்று இரவு தனியார் பேருந்து புறப்பட்டது. இதில், 40 பேர் பயணம் செய்தனர். மகேஷ்புரா என்ற கிராமத்துக்கு பேருந்து வந்தது. அப்போது, அந்த பகுதியில் தாழ்வாக சென்ற மின்கம்பியின் மீது பேருந்தின் மேற்கூரை உரசியது. இதனால், பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பயணிகள் அலறி அடித்துக் கொண்டு தப்பிக்க முயன்றனர். எனினும், தீயில் சிக்கிய 6 பயணிகள் உடல் கருகி பலியாகினர். மேலும், 30 பேர் காயமடைந்தனர்.தீ விபத்தில் இறந்தவர்கள் நகோடாவில் உள்ள ஜெயின் கோயிலுக்கு சென்று விட்டு பிவார் திரும்பி வந்து கொண்டு இருந்ததாக தெரிகிறது.

மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ்: கர்நாடக  மாநிலம், மங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்துக்கு நேற்று முன்தினம் இரவு மலபார் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. நேற்று காலை 7.45 மணியளவில் கொல்லம் அருகே இடவா என்ற பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது, இன்ஜினுக்கு அடுத்துள்ள பார்சல் பெட்டியில் இருந்து திடீரென புகை வந்தது. பின்னர், தீப்பிடித்து எரிந்தது. இதைக் கண்ட பயணிகள் அதிர்ந்து, அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் ரயில் நின்றது. எரிந்த பெட்டியில் ஏராளமான பைக்குகள் இருந்தன. அவற்றில் 3 பைக்குகள் எரிந்து நாசமாகின. இது தொடர்பாக பார்சல் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>