அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலையை விட ஒற்றுமை சிலையை அதிக சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு உள்ளனர்: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ‘‘அமெரிக்காவின் சுதந்திரா தேவி சிலையைக் காட்டிலும், குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலையை அதிக சுற்றுலா பயணிகள் பார்த்துள்ளனர்,’’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம், கேவடியாவில் ஒற்றுமை சிலை என்று அழைக்கப்படும் மறைந்த முன்னாள் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது. இதை மிகச் சிறந்த சுற்றுலா தளமாக மாற்றுவதற்காக, பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறார். இதன் ஒரு கட்டமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளுடன் கேவடியாவை இணைப்பத்றகான 8 புதிய ரயில்களின் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

விழாவில்அவர் பேசியதாவது: புதிய ரயில் சேவையானது உலகின் மிகப்பெரிய ஒற்றுமை சிலை அமைந்துள்ள கேவடியாவுடன் நாட்டின் பல பகுதிகளை இணைக்கும். இதன் காரணமாக ஒற்றுமை சிலைப்பகுதி முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலமாக மாறும். ஒரு நாளைக்கு லட்சம் பேர் இந்த சிலையை பார்வையிடுவார்கள் என கணக்கெடுப்புக்கள் தெரிவிக்கின்றது. புதிய ரயில் சேவையால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பது மட்டுமின்றி உள்ளூர் மக்களும் பெரிதும் பயன்பெறுவார்கள். அமெரிக்காவின் சுதந்திரா தேவி சிலையுடன் ஒப்பிடும்போது, ஒற்றுமை சிலையை 2 ஆண்டுகளில் இதுவரை 50 லட்சம் பேர் ஒற்றுமை சிலையை பார்வையிட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். வாரணாசி, தாதர், அகமதாபாத், அசரத் நிசாமுதீன், ரேவா, சென்னை மற்றும் பிரதாப் கர் பகுதிகளில் இருந்து இந்த ரயில்கள் இயக்கப்படுன்றன.

* மெதுவான ரயில் பயணத்தை நினைவுக்கூர்ந்த பிரதமர் மோடி

குஜராத்துக்கு 8 ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ‘‘பரோடா முதல் தபோய் குறுகிய வழி ரயில்பாதை குறித்து மிக குறைந்த சிலரே அறிந்திருப்பார்கள். நான் இந்த பாதை வழியாக பயணம் செய்வேன். வேடிக்கையான விஷயம் என்னவென்றால் அந்த வழித்தடத்தில் ரயில் மிகவும் மெதுவாக இயக்கப்படும். நமது வசதிக்கேற்றார் போல எங்கு வேண்டுமானாலும் இறங்கி கொள்ளலாம். சில நேரங்களில் நாம் ரயிலுடன் நடந்தே செல்லலாம். ரயில் செல்லும் வேகத்தை விட நாம் நடக்கும் வேகம் அதிகமாக இருப்பதை உணரலாம். நான் பல நேரம் இது போன்று ரசித்துள்ளேன்,” என்றார்.

Related Stories: