×

சில்லி பாயின்ட்...

* தாய்லாந்து ஓபன் டென்னிஸ்தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் கரோலினா மரின் (ஸ்பெயின்), ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விக்டர் ஆக்சல்சன் (டென்மார்க்) சாம்பியன் பட்டம் வென்றனர்.
* சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரில் புதுவை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. அந்த அணியின் 41 வயது வேகப் பந்துவீச்சாளர் சாந்த மூர்த்தி 5 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்தார். டி20ல் மிக மூத்த வயதில் (41 ஆண்டு, 129 நாள்) 5 விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.
* இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் 74 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 38 ரன் எடுத்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 36 ரன் மட்டுமே தேவைப்படும் நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது (இலங்கை 135 & 359; இங்கிலாந்து 421 & 38/3).

Tags : Roulette Point ...
× RELATED 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்